இது ஐதேக வரவு செலவுத் திட்டம்! இதில் எந்த தவறும் இல்லை – ராஜித

0
226

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தத் தவறும் இல்லை எனவும், நேற்று (13) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டமே எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே இந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “இந்த பட்ஜெட் ஆவணத்தில் எந்த தவறும் இல்லை. இது ஒவ்வொரு திட்டத்திற்கும் சில ஏற்பாடுகளை வழங்கியுள்ளது. ஆனால் பாராளுமன்ற வரலாற்றை பார்க்கும் போது இது போன்ற வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இது போன்ற பிரேரணைகள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அப்படியானால் மக்களுக்கு பரிந்துரைகள் அல்ல முக்கியம். அவர்கள் வேலை செய்தாலும் சரி. ஆண்டின் இறுதியில், இவை எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்பது முக்கியம். நான் 2002ல் நிலம் தொடர்பான திட்டத்தை கொண்டு வந்தேன். இதையே 2015ல் எம்.பி கயந்த கொண்டு வந்தார். மேலும் இது ஐ.தே.க வரவு செலவு திட்டம். இதில் பல விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாது போனது. இதனை மொட்டு கட்சியினரால் மட்டுமே எதிர்க்க முடியும்” என்று ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here