பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு; சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலை

0
186

யாழ். சிறைச்சாலையில் பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிரி வால்ட், தமது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவராக சிறி வால்ட் அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருட்டு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகியே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், இந்த சம்பவத்துக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here