நீதிமன்றில் அமைச்சர் ஹரீன் விடுத்த அறிவிப்பு

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு இடைக்கால நிர்வாக குழுவொன்றை நியமித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தப் போவதில்லை என புதிய விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவர் ஷம்மி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட மனு தொடருமா? இல்லையா? என்பதை எதிர்வரும் 15ஆம் திகதி அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட நவம்பர் 05, 2023 திகதியிட்ட 2356/43 என்ற அதிவிசேட வர்த்தமானியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...