எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியாது என மீண்டும் வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு குழுவினரிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன்என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து தனது கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் இடம்பெறக்கூடிய எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள பெரமுன தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு வேடிக்கையாக நான் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேர்த்ல சட்டத்தின் கீழ் மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிடமுடியாது
பல பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன யார் வேட்பாளர் என பார்ப்போம் என அவர் தெரிவித்துள்ளார்