ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று கூறுவதற்கு கட்சிக்கு உரிமை உண்டு எனவும், ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவ்வாறு கூறுவதற்கு தற்போது தயாராக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவர் கட்சி வேட்பாளர் என்று சொல்ல அவருக்கு உரிமை உள்ளது.
ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகக் கூறத் தயாராக இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட எமது அரசியல் சபையினால் எடுக்கப்படும் தீர்மானம் இது. அந்தக் குழுவை எடுத்துக்கொண்டால் சில சமயம் அதில் ஒரு பெயர் வரும்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் வந்துவிடும். ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து சரியான முடிவை எடுங்கள்.
நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.