அநுரவை நோக்கிப் படையெடுக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள்!

Date:

இன்று (06) பிற்பகல் ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தனர்.

பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் (Head of Chancery) Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்து இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் இராஜதந்திரிகள் விழிப்புணர்வூட்டப்பட்டதோடு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பற்றியும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நாடுகளுடன் பரஸ்பர நன்மதிப்பு மற்றும் ஒத்துழைப்பினை அடிப்படையாகக்கொண்டு செயலாற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் தயார்நிலை பற்றியும் இந்த சந்திப்பின்போது நாங்கள் இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்காக சிறப்பு போக்குவரத்து சேவைகளை...