கிழக்கு ஆளுநர் அழைப்பில் பிரபல பக்திப் பாடகர், தெய்வீக சொற்பொழிவாளர் இலங்கையில்

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

நேற்றைய தினம் போரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் அவர்களின் தெய்வீக சொற்பொழிவும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தெய்வீக கானங்களும் இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.

பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...