Sunday, January 5, 2025

Latest Posts

பாடசாலை கல்வியில் ஏ.ஐ விடயப்பரப்பை உள்ளடக்க ஒப்பந்தம்!

தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (ஏ.ஐ) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் நேற்று (19) அரச தலைவர் அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

20 மாவட்டங்களில் 20 பாடசாலைகளைத் தெரிவு செய்து தரம் 8 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான நவீன வகுப்பறைகளையும தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அதன்படி கல்விச் செயற்பாடுகளை தொழில்நுட்ப முறையில் முன்னெடுப்பதற்கான உதவிகளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் குழுவொன்று வழங்கவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முன்பாக அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் அரச தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகஅரச தலைவரிடம், மைக்ரோசொப்ட் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

இந்த வேலைத்திட்டத்தை 2025 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், இலங்கை மக்களுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றும் அதனால், அனைவரும் முழுமையான பயனடைய வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு சுயாதீன குழுக்களின் ஆதரவை பெற்றுத்தருவதாகவும் அவர் தெரிவித்தார்.(ஏ)

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.