அரசதலைவர் தேர்தல் முதலில் நடத்தப்படுவதே பொருத்தமான தாகும் என்று ஐக்கிய தேசியக் கட் சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்றுமுன் தினம் மேலும் தெரிவித்ததாவது:-
அரசமைப்பின் பிரகாரம் அரசதலைவர் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர், ஒக்ரோபர் காலப்பகுதிக்குள் நடத்தவேண்டும். அதன் பிரகாரம்அரசதலைவர் தேர்தல் இடம்பெறும்.
என்றாலும் அரசதலைவர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் ” சில கட்சிகள் கோரிவருகின்றன.
ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் பொரு ளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதிமுன்னெடுத்துவரும்அனைத்து 5 வேலைத்திட்டங்களும் தடைப்படும்.
நாட் டின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் பின்தள்ளப்படும். அதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக அதில் வெற்றிபெறுவார்.
அதன் பின்னர் பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் சென்றால் நிலையான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்றார்