துறைமுக நகருக்கான மேம்பால அதிவேக வீதி ஜூலையில் மக்கள் பாவனைக்கு

Date:

கொழும்பு – இங்குறுகடை சந்தியில் இருந்து துறைமுக நகரம் வரை தூண்கள் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பால அதிவேக வீதி எதிர்வரும் ஜூலை மாதத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக வீதியின் 80 வீதமான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்குறுகடை, புறக்கோட்டை, அளுத்மாவத்தை, காலி முகத்திடல் மற்றும் துறைமுக நகரம் ஆகிய 5 உள்நுழைவுகளை இந்த அதிவேக வீதி கொண்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

5.3 கிலோமீட்டர் நீளமான இந்த அதிவேக வீதி நான்கு ஒழுங்கைகளைக் கொண்டுள்ளதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக வீதிக்கு 28 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...