தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகக் கொட்டகை அமைத்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடக்கு, கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் இன்று நடைபெற்று வருகின்றது.