பிரபல ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்த திட்டம்?

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பலம் வாய்ந்த வேட்பாளரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் மிகவும் இரகசியமான அறிக்கையொன்றை பிரதான நீதவான் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பி அறிக்கை இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட வேண்டுமெனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாக்குதல் திட்டத்தை வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய நபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு பிரதம நீதவான் பணிப்புரை விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...