2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் நேற்று (18) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
அதன்படி தற்போது “அமைதியான காலம்” தொடங்கியுள்ளது.
தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ம் திகதி வரை இந்த அமைதியான காலம் அமலில் இருக்கும்.
அமைதியான காலகட்டத்தில், எந்தவொரு பிரச்சாரமும் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.