மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுத்திருந்தார்.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.