அரசியல் கைதிகள்விரைவில் விடுதலை- நீதி அமைச்சர் உறுதிமொழி

Date:

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம் தாழ்த்தாது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டியபோதே, அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்ற உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பதவியேற்று ஒரு மாத காலப்பகுதிதான் ஆகின்றது. இருந்தாலும் உரிய சட்டத்தரப்புகளுடன் கலந்துரையாடி, கூடிய விரைவில் அரசியல் கைதிகள், சாட்சிகளின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அத்துடன், ஊழல்கள், மோசடிகள் தொடர்பிலும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமாகவும் நிச்சயம் நடவடிக்கைகள் இடம்பெறும்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...