Thursday, December 26, 2024

Latest Posts

அரசியல் இலஞ்சம் பெற்ற இருவர் போட்டியிடவில்லை – சுமந்திரன்

எங்கள் எம்.பிக்கள் இருவர் மதுபானசாலைகள் அமைப்பதற்கு அனுமதி பெற்றுக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்கள். அவ்விருவரும் இம் முறை தேர்தல் போட்டியிடவில்லை என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பருத்தித்துறை வி.எம் றோட்டில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் வியாழக்கிழமை (19) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து​ தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மதுபானசாலைகள் அனுமதிக்கு ஒரு வரையறை உண்டு அந்த வரையறைக்குள் இந்த அனுமதியைப் பெற்றுள்ளார்களா. ஆனால் அவர்கள் இம் முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

கடந்த காலங்களில் 361 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு வகையில் அரசியல் இலஞ்சமாகும். இவை எம்.பிக்களின் சிபாரிசில் செய்யப்பட்டுள்ளன. இதனை வெளிப்படுத்துவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெறுமனே அத்தனை மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் எந்தெந்த எம்.பிக்களின் சிபாரிசில் அவை வழங்கப்பட்டது.எனத் தெரிவிக்கப்படவில்லை.

இது ஒரு வகை அரசியல் லஞ்சமே இதனை அரசு வெளிப்படுத்த வேண்டும். ஒரு மாவட்டத்துக்கு எத்தனைமதுபானசாலைகள் அமைய வேண்டும் என்பது தொடர்பாக வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் உண்டு. அதன் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என நம்புகின்றேன்.

இவ் வருடத்தில் 361 மதுபானசாலைகள் வழங்கப்பட்டுள்ளன இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்தில் மதுபானசாலைகளுக்கு உரிமமம் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக கூறியிருந்தார்கள். அப் போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசில் மதுபானசாலைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊழல், லஞ்சம் போன்றவற்றை முற்றாக ஒழிப்போம் என்று சொல்லி இந்தப் பதவிக்கு வந்த அரசாங்கம் மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் பின்வாங்குவதாக தோன்றுகிறது. எமது மாவட்டத்தை பொறுத்த வரை கடந்த பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் இருவர் மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் பெற சிபாரிசு செய்ததாக ஒப்புக்கொண்டனர். அந்த இருவரும் இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.