முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார்.
இன்று (04) முற்பகல் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்திருந்த அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.