இ.தொ.கா தலைவர் உள்ளிட்ட குழு ஜப்பான் தூதுவரை சந்தித்து பேச்சு

Date:

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயர் யோகராஜா, முன்னாள் பிரதி அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இச்சந்திப்பின் போது மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி, எதிர்கால பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் என்பவற்றிற்கு ஜப்பான் உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று சாதகமாக பரிசீலிப்பதாக ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...

எம்மை பயமுறுத்தி வாயடைக்க முடியாது

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுஜன பெரமுனையின்...

ஹெலிகாப்டர் கொள்வனவு செய்ய சிங்கப்பூர் சென்றுள்ள டட்லி

அடிக்கடி செய்திகளில் இடம்பெறும் கோடீஸ்வர தொழிலதிபர் டட்லி சிறிசேன ஹெலிகாப்டர் ஒன்றை...