உயர்தரம் கற்கும் மாணவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு

Date:

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் கிணறு ஒன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிகெட் போட்டியை காணச் சென்று வீடு திரும்புள்ளார்.

இதனையடுத்து, சிறுவனை நீண்ட நேரம் காணவில்லை என உறவினர்கள தேடிய நிலையில் மரக்கறி தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் சடலமாக கிடப்பதை சிறுவனின் உறவினர்கள் கண்டுள்ளனர்.

பின்னர் சிறுவனை மீட்டு பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உதட்டுப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதோடு இந்த சிறுவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...