இலங்கை கடற் பரப்பில் ஈரானிய கப்பலுக்கு நடந்தது என்ன?

Date:

காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 20 முதல் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் ஒன்றையும், அதில் உள்ள பணியாளர்களையும் மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆரம்பித்துள்ளன.

ஈரானிய கப்பல் ஒன்று காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதாக (அல்லது தரைதட்டியதாக) தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று ஏற்கனவே அவ்விடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவசியமேற்படின் ஒத்துழைப்பு வழங்க இலங்கை விமானப்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து காலியில் இருந்து சுமார் 20-40 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச அல்லது இலங்கை கடற்பரப்பில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மீட்புப் பணிகளுக்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பல் ஒரு வணிகக் கப்பலா அல்லது கடற்படைக் கப்பலா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...