இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கக் கூடும்

Date:

இலங்கையின் பொருளாதாரம் நிலையாகவே இருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதலால், வர்த்தகம், பண அனுப்புதல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் வாயிலாக பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குனர் ஜூலி கோசாக்  அண்மையில் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், டிட்வா புயலின் தாக்கம் இருந்த போதிலும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய பேச்சுவார்த்தைக்காக, மார்ச் 26 முதல் ஏப்ரல் 9ஆம் நாள் வரை சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது என்று கோசாக் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்கு மோதலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் வகையில் இருதரப்பினரும் பரிமாற்றம் மேற்கொள்ள உள்ளதாகவும், இலங்கைக்கு தொடர்ந்து எவ்வாறு ஆதரவளிக்க முடியும் என்பது குறித்த புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டுடன் அக்குழுவினர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்துக்குத் திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...