கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

0
244

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகத் தலைவராகக் கருதப்படும் ஹரக் கட்டா தொடர்பான CID விசாரணையில் தலையீடு செய்யும் நோக்கில் ரூ.120 மில்லியன் (12 கோடி ரூபா) பெறப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணை தகவல்களின்படி, ஹரக் கட்டா மீது அமுலில் இருந்த PTA (பயங்கரவாத தடுப்புச் சட்டம்) அடிப்படையிலான தடுப்புக் காவலை மாற்றி, சாதாரண கைதியாகக் கருதி வேறு சிறைக்கு மாற்றுவதற்காக CID அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here