ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

0
21

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வூல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரூ.16 மில்லியனுக்கும் அதிகமான அரசுப் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மேலும், அதற்கு துணைபுரிந்ததாக சமன் ஏகநாயக்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான மேலதிக சட்டமா அதிபர் திலீப் பீரிஸ், அடுத்த விசாரணை திகதிக்கு முன்னர் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

எனினும், இன்று வரை அந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here