கொழும்பு – பெல்லன்வில பகுதியில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்து கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
