கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 34,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட இரண்டு பொது மன்னிப்பு காலங்களை பயன்படுத்தி, இராணுவத்திலிருந்து 31,088 பேரும், கடற்படையிலிருந்து 2,501 பேரும், விமானப்படையிலிருந்து 1,394 பேரும் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
