நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான மற்றும் காற்றுடன் கூடிய விலைவுகள், தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழை காரணமாக இன்று முதல் மேலும் தீவிரமடையக்கூடுவதுடன், அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
