சீரற்ற வானிலையால் 16,345 பேர் பாதிப்பு

0
167

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அந்த நிலையம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அங்கு 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 7,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் தலா ஒரு மரணம் வீதம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 

அதன்படி, சீரற்ற வானிலையால் இதுவரை மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

அனர்த்த நிலைமையினால் ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 383 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து இந்தத் தரவுகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here