நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீட்டிப்பதற்காக கொண்டுவரப்படவுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடையே பெரிய அளவிலான விவாதம் எதுவும் இல்லை என விவசாய அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விவாதம் குறிப்பிட்ட சட்டத்துறை சார்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அந்தத் துறையுடன் தொடர்புடையவர்களிடையே மட்டுமே இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் இது தொடர்பில் தங்களது கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும், இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் கே. டி. லால்காந்த இந்தக் கருத்துகளை நேற்று (13) கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது வெளியிட்டார்.
