அரசாங்கம் வெற்றி – பிரதி அமைச்சர் தகவல்

0
8

இலங்கை இதுவரை நடப்புக் கணக்குப் பற்றாக்குறையுடன் பயணித்து வந்த போதிலும், தற்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும், நடப்புக் கணக்கை நேர்மறையான நிலைக்குக் கொண்டுவர அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தவறான முகாமைத்துவ முறையைப் பின்பற்றவில்லை என்பதே முதலாவது விடயம் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதாரம் இதுவரை மற்றுமொரு பற்றாக்குறையுடனேயே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், அது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை எனவும் தெரிவித்தார்.

எனினும், தற்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் நடப்புக் கணக்கை நேர்மறையான நிலைக்குக் கொண்டுவர முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு இறக்குமதி செய்யப்படாமல் இருந்திருந்தால் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 9.2 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்கள் பல்வேறு நன்மைகளை எதிர்பார்ப்பதாகவும், அந்த நன்மைகள் பல்வேறு வழிகளில் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவை நேரடியாகப் பணமாகவோ அல்லது நேரடிப் பலன்களாகவோ கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள ICT ரத்னதீப ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட ஆய்வுக் கருத்தரங்கில் உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here