வீரகெட்டிய, அக்கிரஹார பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த இளைஞரை இலக்கு வைத்து அவரது வீட்டிற்கு முன்னால் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக தங்கல்லை அடிப்படை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
