வடக்கு, கிழக்கு காணிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆய்வு

0
157

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு, தற்போது விடுவிக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவித்து, உரிய மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் என்ற வகையில் நான் கலந்துகொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணி உரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால நலன்கள் தொடர்பான விடயங்களை எடுத்துரைத்தேன்.

தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்திய அதேவேளை, பாதுகாப்புத் தேவைகளுக்கு அவசியமற்ற காணிகளை இனங்கண்டு, அவற்றை இயன்றவரை விரைவாக மக்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி அவர்கள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதும் இதனுடன் இணைந்த முக்கிய பொறுப்பாகும். குறிப்பாக, நவீன விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மக்களின் காணி உரிமையை மதித்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here