–மாவட்ட மட்டத்தில் விசேட மக்கள் பேரணிகள் – நலிந்த ஜயதிஸ்ஸ
செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாடு முழுவதும் மாவட்ட மட்டத்தில் விசேட மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“ஜி.எல். பீரிஸின் வீட்டில் இரவு நேரங்களில் சதித்திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்காமல், வெளியே வந்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் செய்யுங்கள். மக்கள் கூட்டங்களை நடத்துங்கள். மக்களை ஒன்று திரட்டுங்கள்.
கோட்டாபயவை விட ஒன்று இருக்கிறது, ரணில் விக்கிரமசிங்கவை விட ஒன்று இருக்கிறது, அதைவிட ஒன்று இருக்கிறது, இதைவிட ஒன்று இருக்கிறது என்று கூறிக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. வார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை.
ஆனால், நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக கிராம மட்டத்தில், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் எமது தொகுதிச் சபைகளை மறுசீரமைத்து வருகிறோம்.
இந்த செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்டங்களில் மிகப்பெரிய மக்கள் பேரணிகள் நடத்தப்படவுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக உண்மையிலேயே மக்கள் கருத்து இருக்குமானால், அதை நிரூபித்துக் காட்டுங்கள் என்பதே எங்களது கோரிக்கை. அதைத்தான் செய்ய வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளையாவது கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள்.”
அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (22) களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
