பஸ் லலித் தொடர்பில் தீவிர விசாரணை

0
166

நாட்டிற்குள் குற்றச் செயல்கள், படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு, துபாய்க்குத் தப்பியோடித் தலைமறைவாகியிருந்த கன்னங்கரகே லலித் கன்னங்கர அல்லது ‘பஸ் லலித்’ அல்லது ‘குளு லலித்’ என்பவ, ஓகஸ்ட் 25ஆம் திகதி அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிறப்புக் குழுவினரால் அங்கு கைது செய்யப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

களுத்துறை தெற்கு, தூவ விகாரை வீதியைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ 36 வயதுடையவராவார்.

இவர் ஓகஸ்ட் 25ஆம் திகதி அதிகாலை 05:20 மணிக்குத் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-226 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இவர் ஹங்வெல்ல, அவிசாவத்தை, கட்டுக்குருந்த, பாதுக்க, மீகொடை   ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மனிதப் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதுடன், C-4 வகையைச் சேர்ந்த அதிபயங்கர வெடிபொருட்களைத் தன்வசம் வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவிற்குப் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here