இன்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாவால் அதிகரிக்க குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அதிகரிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.
அன்று நடைபெறும் கூட்டத்தில், பாண் உள்ளிட்ட ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
