ரூ.100 மில்லியன் இலஞ்ச வழக்கில் நாமலுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
191

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (18) நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

‘ஏர்பஸ் விவகாரம்’ என பரவலாக அறியப்படும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ரூ.100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் அடிப்படையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 29ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஏர்பஸ் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கில், செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் செப்டம்பர் 16ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here