பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

0
25

பத்தேகம, ஹல்பத்தொட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் வந்த குழுவினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதில், ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரும் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here