பத்தேகம, ஹல்பாதொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் நேற்று (28) இரவு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், குறித்த துப்பாக்கிச் சூட்டில் முன்தினம் உயிரிழந்த ‘களு நோனா’ என அழைக்கப்பட்ட பெண்ணின் தாயாரான டி. என். ஜி. மல்லிகா என்பவராவார்.
கடந்த 27ஆம் திகதி மதியம் பத்தேகம, ஹல்பாதொட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றை காரில் பின்தொடர்ந்து வந்த குழுவினர், T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது வாடகை முச்சக்கர வண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அம்பலாங்கொடை செஞ்சிலுவை வீடுகள், கொடஹேன பகுதியில் வசித்து வந்த 47 வயதான சுசிதா இரோஷணி, ‘களு நோனா’ என அழைக்கப்பட்ட பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த துப்பாக்கிச் சூட்டில் இலக்காகிய மூவரும் தற்போது உயிரிழந்துள்ளனர்.
