கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் மூத்த மகனான கனிஷ்க சேனாநாயக்க காலமானார்.
இவர் உயிரிழக்கும் போது 41 வயதாக இருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கனிஷ்க சேனாநாயக்க, 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.
மறைந்த தொழிலதிபர் அதுல சேனாநாயக்க மற்றும் ரோசி சேனாநாயக்க தம்பதியரின் மூன்று பிள்ளைகளில் மூத்த மகன் கனிஷ்க சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.
