வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வரிச்சுமைக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று (03) கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சுஜித் குருவிட்ட உள்ளிட்ட ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை மற்றும் சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகள் மற்றும் அவற்றை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
