பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

0
33

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் இன்று (20) முற்பகல் 11.30 மணிக்கு விடுக்கப்பட்டுள்ளதுடன், இது நாளை (21) அதிகாலை 1.30 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் வாழும் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதுடன், தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here