இன்று (11) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் போது அரசாங்கத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்திற்கு, முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நீண்ட நாட்களாக உருவாகி வந்த சூழ்நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் இன்று அல்லது நாளை ஒற்றுமைப் பிளவுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றால் ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடுவதை தவிர்க்க முடியாது என நாம் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.