வரக்காபொல விபத்தில் மூவர் உயிரிழப்பு; நால்வர் காயம்!

0
16

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல, மாஹேன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்திசையில் வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் வேனின் சாரதியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here