நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 762 குடும்பங்களைச் சேர்ந்த 2,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள 105 பிரதேச செயலாளர் பிரிவுகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 1ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், நீரில் மூழ்கி 8 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும், வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
