பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முட்டை விலை அதிகரிப்பு

0
16

பண்டிகைக் காலம் நெருங்கி வருவதையடுத்து, தற்போது சந்தையில் முட்டைகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சந்தையில் ஒரு முட்டை 42 முதல் 45 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிக மழை காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 80 சதவீதமாக இருந்த உற்பத்தித் திறன், 50 முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் கால்நடைத் தீவன உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பேக்கரி உற்பத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பேக்கரிகளுக்கும் அதிகளவில் முட்டைகள் தேவைப்படுகின்றன.

இதன் காரணமாகவே முட்டை விலை அதிகரித்துள்ளது. இது கேள்வி மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட விலை உயர்வே தவிர, செயற்கையான விலை அதிகரிப்பாக எமக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், சில பகுதிகளில் ஒரு முட்டையின் விலை ஏற்கனவே 46 முதல் 48 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முட்டை விலை அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தொடரக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழையினால் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here