இலங்கையில் ரூ.7,000 குறைந்த தங்கம்

0
19

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை தற்போது 3,526 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இதனால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 3,500 அமெரிக்க டொலர் எல்லையை நெருங்கியுள்ளது.

இலங்கையிலும் இன்று (20) தங்கத்தின் விலை ரூ.7,000 குறைந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட விலை நிலவரத்தின்படி:

  • 24 கரட் தங்கப் பவுண்: ரூ.345,000
  • 22 கரட் தங்கப் பவுண்: ரூ.317,400

நேற்றைய தினம் (19) 24 கரட் தங்கப் பவுண் ரூ.352,000 ஆகவும், 22 கரட் தங்கப் பவுண் ரூ.323,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here