கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட இளைஞனிற்கு நீதி கோரி பரந்தன் சந்தியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பரந்தன் சந்தியில் புது ஆண்டு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட
குணரட்னம் கார்த்தீபன் என்னும் 24 வயதுயுடை, 13 ஆம் ஒழுங்கை முல்லைவீதி பரந்தன் என்னும் முகவரியுடைய இளைஞன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்தி படுகொலை இடம்பெற்று 4 தினங்களானபோதும் கொலைக்கு காரணமானவர்களை பொலிசார் கைது செய்யவில்லை எறத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞன் மீது போத்தலினால் குத்தியதன் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை எவருமே கைது செய்யப்படவில்லை என உறவுகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதனால் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரிகை இன்று இடம்பெற்ற சமயம் உடல் பரந்தன் சந்திக்கு எடுத்து வரப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்களும. உறவுகளும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
கையில் எடுத்து வரப்பட்ட உடலை நடு வீதியில் வைத்து ஒரு மணி நேரம. இந்த போராட்டத்தில் உறவுகளும் ஊர் மக்களும் ஈடுபட்டனர். இதன்போது தமது வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களும் தமது ஆதரவை வழங்கினர்.