எரிபொருள் கோட்டா மற்றும் வழங்கும் காலம் அறிவிப்பு

Date:

எரிபொருள் கோட்டா முறையில் வழங்கும் முன் ஒத்திகை சோதனை ஜூலை முதல் வாரத்தில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.

“அதனால்தான் ஜூலை முதல் வாரத்தில் ஒரு பரிசோதனையாக கோட்டா முறையை அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம். அப்போது கோட்டா முறையை தவறான விளக்கமாகப் பதிவு செய்தார்கள், வேறு இடங்களுக்குச் செல்லும் போது எப்படி எரிபொருள் நிரப்புவது என்று கேட்டார்கள். அப்படி இல்லை. அருகிலுள்ள நிரப்பு நிலையம் பதிவு செய்யப்பட்டு, ஒரு வாரத்தில் உங்களுக்கு வழங்கப்படும் லிட்டர்களின் எண்ணிக்கை – உதாரணமாக, உங்களுக்கு 100 லிட்டர் கொடுக்கப்பட்டால், அந்த 100 லிட்டரில் குறைந்தது 60 லிட்டராவது அந்த பதிவு செய்யப்பட்ட நிரப்பு நிலையத்தில் இருந்து பெறலாம். மீதமுள்ள 40 லிட்டரை நாட்டிலுள்ள வேறு எந்த நிரப்பு நிலையத்திலிருந்தும் வாங்கலாம். விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, அந்த வழிமுறையை நாங்கள் இன்னும் உருவாக்கவில்லை. எனவே இதை சரிசெய்ய இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும்.

இவ்வாறு எரிசக்தி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...

வெலிகம பிரதேச சபை NPP வசம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02)...

BAW M8 அறிமுகம், 1,500 EV விநியோகம், TELD உடன் இணைவு – Browns EV எட்டிய முக்கிய மைல்கல்

LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம்...