பாடசாலைகளுக்குப் பூட்டு! வெளியானது அறிவிப்பு

Date:

எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக கொழும்பில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்துச் சிக்கல்கள் அற்ற, நாட்டிலுள்ள அனைத்து கிராமியப் பாடசாலைகளையும் அதிபர்களின் விருப்பத்திற்கேற்ப பராமரிக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

புறநகர்ப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் இந்த வாரத்தில் இணையவழி முறை கற்பிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இணையவழி கல்வி நடைபெறும் பகலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று பொது பயன்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் கல்வி அதிகாரிகளின் கூட்டத்தில் அடுத்த வாரக் கல்வி குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு...

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு அழுத்தம்

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக விடுவிக்குமாறு நோர்வேயின்...

“அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம்!”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...