இலங்கைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கியுள்ளது.
இது இந்த நாட்டில் ஆரம்ப சுகாதார சேவைகளின் தரம் மற்றும் பயனை மேம்படுத்துவதற்காகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் எந்த இலக்குகளையும்...
ரஷ்ய – உக்ரேன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24) ரஷ்யா செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார...
பல்கலைகழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள்,...
இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய வேளை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 3 படகுகளுடன்...