அருந்திக பெர்னாண்டோ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கதறி அழுதார். ஆனால் பலன் இல்லை!

Date:

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ நேற்று (03) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எவ்வாறாயினும்,ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகம மருத்துவ பீடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமன்றி நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல எத்தனோல் கடத்தல்காரரை கைதுசெய்து பிணையில் விடுவிக்க உதவியமை தொடர்பிலும் அருந்திக பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது .

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து அருந்திக பெர்னாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கச் சென்றார். அவர் அழுதுகொண்டே தனது துயரத்தை பிரதமரிடம் தெரிவித்ததாகவும், தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பிரதமர் தலையிட மறுத்ததை அடுத்து அருந்திகா பதவி விலக நேரிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...